பாகிஸ்தானை உலுக்கிய பேருந்து விபத்து...! சம்பவயிடத்திலேயே 40 பேர் பலி
பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
பலூசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்குவா மாகாணங்களின் எல்லையில் அமைந்துள்ள செஹ்ரானி - ஸோப் நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குவேட்டாவில் இருந்து பெஷாவர் நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகி உள்ளது.
பாகிஸ்தான் அதிகாரிகள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தனாசார் பகுதியின் அருகில் வந்த போது திடீரென அந்தப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் அந்தப் பேருந்தில் பயணித்த 40 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
At least 40 killed after bus plunges into ravine in western Pakistan https://t.co/L8kB6oYdDq pic.twitter.com/wAgWCZLTk8
— Insider Paper (@TheInsiderPaper) July 3, 2026
இந்த நிலையில், தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் படுகாயமடைந்த எட்டு பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், பலியான 40 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்