இன்றுமாலை கோரவிபத்து குழந்தைகள் உட்பட 15 பேர் வைத்தியசாலையில்
Sri Lanka
Sri Lanka Police Investigation
Accident
By Sumithiran
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இன்று மாலை 4.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் படுகாயமடைந்து அம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 6 குழந்தைகள், ஐந்து பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் அடங்குவர்.
எம்பிலிபிட்டிய, கல் வாங்குவ பகுதியில் வீதியைக் கடக்கும்போது எம்பிலிப்பிட்டியவிலிருந்து வந்த கெப் வண்டியொன்று உடவலவயிலிருந்து வந்த வானுடன் மோதி மீண்டும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை
இது தொடர்பான விசாரணைகளை எம்பிலிபிட்டிய தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி