22 நாட்களில் இலங்கைக்கு வந்து குவிந்த இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள்
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நவம்பர் 22-ஆம் திகதி வரை 1,56,627 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதே காலகட்டத்தில், இந்தியாவிலிருந்து 47,338 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து, அதிகபட்ச எண்ணிக்கையை எட்டியுள்ளனர். இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கிட்டத்தட்ட 30 சதவீதமாகும்.
முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த நாடுகள்
ரஷ்யா இரண்டாவது இடத்தில் உள்ளது, அந்நாட்டிலிருந்து 14,744 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இதேபோல், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 10,628 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 9,504 பேரும், சீனாவிலிருந்து 8,640 பேரும் அதே காலகட்டத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 2,018,931 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்தும் முன்னிலை வகிக்கும் இந்தியா
மேலும், 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் 22 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில், 546,963 சுற்றுலாப் பயணிகளுடன் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட நாடாக இந்தியா முன்னிலை வகிக்கிறது.

இதே காலகட்டத்தில், இரண்டாம் இடத்தில் உள்ள ஐக்கிய இராச்சியத்திலிருந்து 183,757 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சீனாவிலிருந்து 132,380 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 114,809 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ள நிலையில், ரஷ்யா 104,485 சுற்றுலாப் பயணிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |