தலைமுறை கடந்தும் தமிழ் வளர்க்கும் 15ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாடு
கனடியத் தமிழ்ச் சங்கம், படிமுறைத் தமிழ் ஒன்றியம், உலகத் தமிழர் பேரவை, Active Brain Center, Department of Historical and Cultural Studies, University Of Toronto, Scarborough இணைந்து நடத்தும் 15ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாடு கனடாவில் இடம்பெறவுள்ளது.
யூன் மாதம் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் University Of Toronto, Scarborough Campusஇல் நடைபெறவுள்ளது.
தலைமுறை கடந்தும் தமிழர் வாழ்வியல் வழி கற்றல் கற்பித்தல் எனும் கருப்பொருளில் குறித்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளையும் சிந்தனைகளயும் ஆராய்தல், தமிழை இரண்டாம் மொழியாகப் பயிலும் மாணவர்களுக்கான கற்பித்தல் முறையை அடையாளம் காணல், தமிழ் கற்றல் கற்பித்தலில் தகவற் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய அணுகுமுறைகளைக் கண்டறிதல், பேச்சுப் புழக்கத்திற்கான கற்றல் கற்பித்தல் முறைகளைக் கண்டறிதல் போன்ற நோக்கங்களுக்காக தமிழாசிரியர் மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த ஆய்வு மாநாட்டில் பங்குபற்ற விரும்புவோர் padimuraitamil.com என்ற இணையத்தளத்திற்கு சென்று படிவங்களை நிரப்பி அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலதிக தகவல்களுக்கு 416 573 7332 , 416 821 5773 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாகவும் அல்லது wtcc@padimuraitamil.com என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் தொடர்புகொள்ள முடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |