கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பத்து கிலோ தங்கம் (படங்கள்)
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் 16 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான தங்கத்துடன் இந்தியாவிற்கு தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் சிறி லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், இந்தியாவின் மும்பைக்கு செல்லவிருந்தபோது, தங்களுடைய பயணப் பொதிகளில் மிகவும் நூதனமாக மறைத்து வைத்திருந்த தங்கப் பதுக்கல்களைக் கண்டுபிடித்தனர்.
இந்தியப் பிரஜையும் கைது
இந்த தங்க கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் இந்தியப் பிரஜையும் விசாரணை நோக்கங்களுக்காக கைது செய்யப்பட்டார், 10.5 கிலோ தங்கம், ஜெல் வடிவிலும் மற்றும் தங்க ஆபரணங்கள், தங்கத் துண்டுகள் ஆகியவற்றைக் கைப்பற்ற முடிந்ததாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
தங்கத்தின் சந்தைப் பெறுமதி
இந்த தங்கத்தின் சந்தைப் பெறுமதி 160 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாகவும் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் இந்த கைது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வார்கள் எனவும் சுங்கம் தெரிவித்துள்ளது.
