கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
கொழும்பு நகரின் பல பகுதிகளுக்கு 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை (17) மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை (18) காலை 9 மணி வரையான 16 மணி நேரத்திற்கு தொடர்ச்சியாக நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
அதில், கொழும்பு 11, 12, 13, 14, மற்றும் 15 ஆகிய 5 பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
தேவையான ஏற்பாடுகள்
அம்பத்தலே நீர் வழங்கல் முறைமை மேம்பாடு மற்றும் ஆற்றல் சேமிப்புத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளின் ஒரு பகுதியாகவே இந்த நீர் வெட்டு இடம்பெறுவதாவும் சபை மேலும் தெரிவித்துள்ளது.
இந்த 16 மணிநேர நீர் வெட்டுக் காலத்தில் நீரைச் சேமித்து வைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நீர் வெட்டுக் காலத்திலும் அதற்குப் பின்னரும் தண்ணீரைச் சேமிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பை சபை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |