16 தமிழ் இளைஞர்கள் விடுதலை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த உத்தரவை இன்று (24) கொழும்பு (Colombo) மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
2017 முதல் 2020 வரை யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் பருத்தித்துறை பகுதிகளில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கவும் 2018 முதல் 2020 வரை ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் சேகரித்ததற்கும் 16 தமிழ் இளைஞர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
வழக்கு விசாரணை
இது தொடர்பாக, சட்ட மா அதிபர் அவர்களுக்கெதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (24) இந்த வழக்கு விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது.
முற்றிலும் விடுதலை
பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள், குற்றச்சாட்டுகள் யாழ்ப்பாணம் பிராந்தியத்தில் நிகழ்ந்தவையென்பதால், கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் இல்லை என வாதிட்டுள்ளனர்.
அவர்களின் வாதத்தை ஏற்ற நீதிபதி மகேஷ் வீரமன், குற்றச்சாட்டுகள் இருந்த போதும், நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்கு உட்படாத நிலையில் வழக்கை தொடர முடியாதென்று தெரிவித்துள்ளார்.
எனவே, குற்றச்சாட்டுகளிலிருந்து அந்த 16 இளைஞர்களையும் முற்றிலும் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
