ரோமானியர்களின் வரலாற்றை சொல்லும் வழிபாட்டுத் தலம் : எங்குள்ளது தெரியுமா
பண்டைய ரோமானியர்களின் 1600 வருடத்திற்கும் முற்பட்ட பழமையான வழிபாட்டு தலம் ஒன்று தற்போது ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிசோரி (Missouri) மாநில செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழகத்தை (Saint Louis University) சேர்ந்த வரலாற்று பேராசிரியர் டக்ளஸ் பொய்ன் (Prof. Douglas Boin) தலைமையிலான குழுவினர் இத்தாலியில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின் போதே இந்த பழமையான வழிபாட்டுத் தலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழிபாட்டுத் தலம் கான்ஸ்டன்டைன் நகர மக்களால் அவர்களின், பேரரசரின் மூதாதையருக்கு அமைத்து கொடுக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களிடம் வேண்டுகோள்
இந்த ஆலயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
280 (கி.பி.) ஆண்டிருந்து 337 (கி.பி.) ஆண்டு வரை ரோமானிய சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட, பேரரசர் கான்ஸ்டன்டைன் (Emperor Constantine) திகழ்கிறார்.
கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய முதலாவது ரோமானியப் பேரரசராக விளங்கும் இவர், ரோமின் தலைநகராக கொன்ஸ்தாந்திநோபிள் (Constantinople) எனும் புதிய நகரை நிர்மாணித்து அரசை அங்கு மாற்றியமைத்தார்.
அப்போது மக்கள், தாங்கள் கடைப்பிடிக்கும் ஒரு திருவிழாவை வெகு தூரம் சென்று கொண்டாட வேண்டியுள்ளதால், அதனை தாங்கள் வசிக்கும் இடத்திலேயே கொண்டாட அனுமதிக்கும்படி பேரரசருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு பதிலளித்த பேரரசர், அவரது மூதாதயரை நினைவு கூரும் விதமாக அவர்களுக்கு ஒரு வழிபாட்டு தலத்தை அமைத்து தரும்படி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த பதில் கடிதமானது "ரீ ஸ்கிரிப்ட்" (rescript) எனும் பெயரில் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.
கோடை கால விடுமுறை
அந்த வேண்டுகோளுக்கிணங்க கொன்ஸ்தாந்திநோபிள் மக்கள், பேரரசரின் மூதாதயரை நினைவு கூர அமைத்துக் கொடுத்த வழிபாட்டு தலம், தற்போது, ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தலமானது ரோம் நகரிலிருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில், ஒரு சிறு மலையில் உள்ள ஸ்பெல்லோ எனும் நகரில், ஒரு வாகன நிறுத்த இடத்திற்கு கீழே, பேரா. பாய்ன் குழுவினர் நடத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழிபாட்டுத் தலம் சுமார் 1600 வருடத்திற்கும் முற்பட்ட இந்த பழமையான வழிபாட்டு தலம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய பண்டைய நாகரீகத்தை காட்டும் வகையில் இத்தாலியில் உள்ள பல புராதன சின்னங்களின் வரிசையில் இந்த ஸ்பெல்லோ வழிபாட்டு தலமும் இடம்பெற வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்த வழிபட்டுத் தலத்தின் 3 சுற்றுச்சுவர்கள் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் கோடை கால விடுமுறை முடிவடைந்த பின்னர் முழுவதுமாக ஆராய்ச்சியை தொடர தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |