ஜனாதிபதி தேர்தல் : போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 17 வேட்பாளர்கள் இதுவரை தமது வைப்புத் தொகையை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, ரணில் விக்ரமசிங்க(Ranil Wickramasinghe), சரத் கீர்த்திரத்ன(Sarath Keerthiratne), ஓஷல ஹேரத்(shala Herath), ஏ. எஸ். பி. லியனகே(A. S. P. Liyanage), சஜித் பிரேமதாச(Sajith Premadasa), பி. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்க(P. W. S. K. Bandaranaike), விஜயதாச ராஜபக்ச(wijayadasa Rajapaksa), கே.கே. பியதாச(K.K. Piyadasa), சிறிதுங்க ஜயசூரிய(Siritunga Jayasuriya), அஜந்த டி சொய்சா(Ajantha de Soysa) கே. ஆனந்த குலரத்ன(K. Ananda Kularatne), சரத் மனமேந்திர(Sarath Manamendra), வணக்கத்துக்குரிய பத்தரமுல்லை செளரத்ன தேரர்(Venerable Battaramulla Selarathana Thero) மற்றும் அக்மீமன தயாரத்ன தேரர்(Akmeemana Dayarathana Thero) ஆகியோர் பிணைப் பணத்தை வைப்பிலிட்டுள்ளனர்.
சரத் பொன்சேகா செலுத்திய வைப்புத்தொகை
இதேவேளை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(Sarath Fonseka) இன்று (05) பிற்பகல் சுயேட்சை வேட்பாளராக வைப்புத்தொகையை செலுத்தினார்.
ஐக்கிய சுதந்திர தொழிற்சங்க மத்திய நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்கவும்(Siripala Amarasinghe) சுயேட்சை வேட்பாளராக இன்று பிணை வைப்புத் தொகையை செலுத்தியதாக தெரிவித்தார்.
மேலும், அருணலு மக்கள் முன்னணி சார்பில் அதன் செயலாளர் டாக்டர் கே.ஆர். கிஷான்(Dr. K.R. Mr. Kishan) ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக பணத்தை வைப்பு செய்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |