அதிரடியாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் : நீதிமன்றின் உத்தரவு

Indian fishermen Mannar Sri Lanka India
By Shalini Balachandran Dec 24, 2024 08:12 AM GMT
Report

புதிய இணைப்பு

கைது செய்யப்பட்ட 17 கடற்றொழிலாளர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு முதல் கட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டனர்.

கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளின் விசாரணையின் பின்னர் மதியம் 1 மணியளவில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 17 சந்தேக நபர்களையும் முன்னிலைப்படுத்திய நிலையில் அவர்களை எதிர்வரும் 7 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதாவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிரடியாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் : நீதிமன்றின் உத்தரவு | 17 Rameswaram Fishermen Arrested Sl

முதலாம் இணைப்பு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று (24) மேற்கொள்ளப்பட்டதுடன் குறித்த கடற்றொழிலாளர்களும் மற்றும் படகுகளும் தலைமன்னார் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கைது செய்யப்பட்ட 17 கடற்றொழிலாளர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தங்க விலையில் தொடரும் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

தங்க விலையில் தொடரும் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

உடனடியாக விடுதலை

விசாரணைகளின் பின்னர் குறித்த கடற்றொழிலாளர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.

இதேவேளை கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதால் தங்கச்சி மடம் கிராமத்தில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கருப்பு கிறிஸ்துமஸ் ஆக மாறி விட்டதாக சோகத்துடன் கூறும் கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்து தாயகம் அழைத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதிரடியாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் : நீதிமன்றின் உத்தரவு | 17 Rameswaram Fishermen Arrested Sl

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (23) திங்கட்கிழமை 400 இற்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

கடற்றொழிலாளர்கள் இரவு சுமார் 12:30 மணி அளவில் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பூண்டி ராஜ் மற்றும் ஆரோன் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசை படகையும் அதிலிருந்து 17 கடற்றொழிலாளர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் பிரேரணை குறித்து வெளியான தகவல்

கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் பிரேரணை குறித்து வெளியான தகவல்

நீதிமன்றத்தில் முன்னிலை

கைது செய்யப்பட்ட 17 கடற்றொழிலாளர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களான எட்டு பேர் உள்ளடங்குகின்ற இதனால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் வீட்டில் குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கவும் கிறிஸ்மஸ் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக நேற்று (23) மாலை மூன்று மணிக்கு மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களை இரவு 12 மணிக்கு இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

அதிரடியாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் : நீதிமன்றின் உத்தரவு | 17 Rameswaram Fishermen Arrested Sl

இதனால் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை எங்களுக்கு கருப்பு கிறிஸ்து மஸாக மாறிவிட்டதாகவும் உடனடியாக கடற்றொழிலாளர்களை விடுதலை செய்து தாயகம் அனுப்பி வைக்குமாறு சிறைபிடிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களிடம் உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

குறித்த கடற்றொழிலாளர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண அபிவிருத்தி : இந்தியாவுடனான ஒப்பந்தத்திற்கு அனுமதி

கிழக்கு மாகாண அபிவிருத்தி : இந்தியாவுடனான ஒப்பந்தத்திற்கு அனுமதி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016