மோட்டார் சைக்கிள் விபத்தில் 17 வயது இளைஞன் பலி
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி மோதி இடம்பெற்ற வீதி விபத்தில் 17 வயதுடைய இளைஞர் ஒருவர் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளதாக கெஸ்பேவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கோர விபத்து கெஸ்பேவ - பண்டாரகம வீதியின் படுவந்தர பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் மடப்பாத, படுவந்தர பகுதியைச் சேர்ந்த இளைஞராவார்.
சாரதி கைது
கெஸ்பேவ பகுதியிலிருந்து பண்டாரகம திசையை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், படுவந்தர சந்தைக்கு அருகில் வீதியின் எதிர் திசைக்குச் சென்று, எதிரே வந்த முச்சக்கரவண்டியின் வலது பக்க பின்பக்க சக்கரத்தில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞரை உடனடியாக பிலியந்தலை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே அவர் உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டியின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் கெஸ்பேவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |