கொவிட் தொற்றுடன் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் 171 மாணவர்கள்
கொவிட் தொற்றுக்குள்ளான 171 மாணவர்கள் திங்கட்கிழமை (8ஆம் திகதி) க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தர்மசேன தெரிவித்தார்.
இந்த மாணவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளான மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருவதுடன், அந்த மையங்களில் தேர்வெழுதியுள்ளனர்.
இந்த மாணவர்களிடம் எந்தவிதமான கடுமையான நோய்களும் பதிவாகவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த மாணவர்களுக்கான பரீட்சை கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களும் சில சமயங்களில் சுகயீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு பதிலாக மேலதிக ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தர்மசேன தெரிவித்தார்.
கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும், தென் மாகாணம் மற்றும் கண்டி உள்ளிட்ட பல பிரதேசங்களில் இருந்து சில நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
