திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் மத்திய வங்கியின் அறிவித்தல்!
Central Bank of Sri Lanka
By Beulah
இலங்கை மத்திய வங்கியானது, திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் முக்கிய அறிவித்தலொன்றினை வெளியிட்டுள்ளது.
அவ்வகையில், 1 இலட்சத்து 75ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் அறிவித்தலில்,
ஏல விற்பனை
“எதிர்வரும் 15ஆம் திகதி இந்த உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளது.

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 75 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 65 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விடப்படவுள்ளன.
அத்துடன், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 8 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்