18 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைத்த புதிய பதவி
18 எம்.பிக்களுக்கு கிடைத்த புதிய பதவி
37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் தினேஷ் குணவர்தனவின் அலுவலகத்தில் வைத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுன எம்பிக்களே நியமனம்
இதன்படி கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக பிரதீப் உண்டுகொட, கம்பஹா மாவட்டத்திற்கு சஹான் பிரதீப் விதான, களுத்துறை மாவட்டத்திற்கு சஞ்சீவ எதிரிமான்ன, காலி மாவட்டத்திற்கு சம்பத் அத்துகோரள, மாத்தறை மாவட்டத்திற்கு நிபுன ரணவக்க, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு சமல் ராஜபக்ஷ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று குருநாகல் மாவட்டத்திற்கு சமன் பிரியா ஹேரத், புத்தளம் மாவட்டத்திற்கு சிந்தக மாயாதுன்னே, அனுராதபுரம் மாவட்டத்திற்கு எச்.நந்தசேன, கண்டி மாவட்டத்திற்கு குணதிலக ராஜபக்ஷ, மாத்தளை மாவட்டத்திற்கு நாலக பண்டார கோட்டேகொட, நுவரெலியா மாவட்டத்திற்கு எஸ்.பி.திஸாநாயக்க, பதுளை மாவட்டத்திற்கு சுதர்ஷன தெனிபிட்டிய, ,இரத்தினபுரி மாவட்டத்திற்கு அகில எல்லாவல, கேகாலை மாவட்டத்திற்கு ராஜிக விக்கிரமசிங்க, திகாமடுல்லைக்கு டி.வீரசிங்க மற்றும் திருகோணமலை மாவட்டத்திற்கு கபில அத்துகோரள ஆகியோர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களாக நியமனக் கடிதங்களைப் பெற்றனர்.
