இன்று முதல் நடைமுறைக்கு வரும் முட்டை மீதான வரி
முட்டை விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 18 சதவீதம் வற் எனப்படும் பெறுமதி சேர் வரி (VAT) விதிக்கப்படுகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இன்று (01) முதல் குறித்த வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பெறுமதி சேர் வரி விதிக்கப்பட்டாலும், முட்டைகளின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை விலை வீழ்ச்சி
எனினும் முட்டைகள் மீது பெறுமதி சேர் வரியை நடைமுறைப்படுத்துவது நியாயமற்றது எனவும், இதனால் இந்த தொழில்துறையில் வீழ்ச்சி ஏற்படும் எனவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை கடந்த காலங்களில் 60 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 25 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
வீழ்ச்சியடைந்து வரும் முட்டை விலையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
