கொழும்பு - கொட்டாஞ்சேனையில் கொடூரம்..! 18 வயது இளைஞன் குத்திக் கொலை
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
Death
By Thulsi
கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த இளைஞர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்தக்கொலை சம்பவம் நேற்று (14.09.2026) இரவு கொழும்பு - கொட்டாஞ்சேனை நகரில் இடம்பெற்றுள்ளது
உயிரிழந்தவர் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.
விசாரணை
கொட்டாஞ்சேனை காவல் நிலையத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தனிப்பட்ட தகராறு முற்றியதால் இரண்டு நபர்களால் இக்கொலை செய்யப்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்காகக் கொட்டாஞ்சேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 16 மணி நேரம் முன்
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..!
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி