வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் அரங்கேற்றிய படுகொலைகள்..! இன்றுடன் 33 ஆண்டுகள் பூர்த்தி
இலங்கையில் தமிழர்களின் மிக நீண்ட கால வரலாறு என்று சொல்லப்படுவது மிக கொடூரமான படுகொலைகளாலும் உயிர்ப்பறிப்புகளாலும் தன்னை நிரப்பிக்கொண்டிருக்கிறது
அந்த வரிசையில் இலங்கையின் அரச படைகளாலும் இந்திய அமைதி காக்கும் படையினர் மற்றும் அரச ஆதரவு ஒட்டுக்குழுக்களாலும் நிகழ்த்தப்பட்டவை ஏராளம் அந்த துன்பியல் வரலாற்றின் ஒரு பாகமாய் தாயக நிலப்பரப்பின் வட முனையில் தமிழரின் போராட்ட வரலாற்றிலும் உலகத்தமிழர்களின் உயர் தனித்துவமான பார்வைக்குரியதுமான வல்வெட்டித்துறை பகுதியில் கடந்த 1989 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி மற்றும் மூன்றாம் திகதிகளில் இலங்கையில் அமைதிகாக்கவென்ற போர்வையில் தாயகப்பரப்பில் களமிறக்கிவிடப்பட்டவர்களும் இலங்கை தமிழர் வரலாற்றில் இந்தியாவினால் படியச்செய்யப்பட்ட வரலாற்று கறையை படியச்செய்தவர்களுமாகிய இந்திய தரைப்படை ராணுவத்தினரின் துப்பாக்கிச்சூடு , மற்றும் ஏனைய படுகொலை வழிகளின் மூலமாக சுமார் 64 ற்கும் அதிகமானவர்கள் கொலை செய்யப்பட்டும் சுமார் 43 பேர் படுகாயம் அடையச் செய்யப்பட்டதுமான துன்பியல் வரலாற்றின் 33 வது நினைவு தினம் இன்றாகும்.
இலங்கையில் காலங்காலமாக தமிழர்களுக்கெதிராக தேசத்தின் மற்றுமொரு நிலப்பரப்பாக விளங்கிய தென்னிலங்கையில் வாழ்ந்த சிங்களவர்களினால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் இன அழிப்பு செயற்பாடுகளுக்கு உறுதுணையாக பாரத துணைக்கண்டத்தின் இந்திய தேசம் தனது ராணுவத்தினரை இலங்கைக்கு அனுப்பியதன் விளைவாக இலங்கையின் வடகிழக்கு பிரதேசங்களில் அரங்கேற்றப்பட்ட மிக கொடூரமான படுகொலை நிகழ்வாக இது பதிவாகிறது .
இந்திய தேசம் தமது படைகள் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என்று திட்டவட்டமாக மறுத்திருந்த போதும் குறித்த தாக்குதல்களில். உயிர் தப்பிய மற்றும் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட வாழும் சாட்சியங்கள் இன்றுவரை ஆதாரமாக இருந்து வருகின்றது
தமிழீழ விடுதலைப்புலிகள் இந்திய அமைதிப்படைகள் மீது நடாத்திய தாக்குதலை அடுத்து ஏற்பட்ட சண்டையில் சிக்கியே குறித்த பொது மக்கள். உயிரிழந்ததாக இந்திய தரப்பு அறிவித்திருந்தது ஆனாலும் பன்னாட்டு ஊடகவியலாளர்களான ரீட்டா செபஸ்தியன் , டேவிட் உசேகா மற்றும் உள்நாட்டு மனித உரிமைகள் அமைப்புகளான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமை அமைப்பு ஆகியன நேரில் கண்ட சாட்டியங்களை ஆவணப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டதன் விளைவாக அவை திட்டமிட்ட மனிதப்படுகொலைகள் என்பதனை உறுதி செய்தன.
மேலதிக தகவல் காணொளியில்,
