மயிலந்தனைப் படுகொலை...! 39 அப்பாவி தமிழ் மக்கள் பலியான சோகத்தின் வடு

Sri Lankan Tamils Tamils Sonnalum Kuttram
By Shalini Balachandran Aug 09, 2026 10:31 PM GMT
Report

ஈழத்தமிழர்களின் தாயக நிலப்பரப்பின் கிழக்குக் கரையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான மயிலந்தனையில் 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி நிகழ்த்தப்பட்ட கொடூரம், ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றில் ஒரு துயரமான அத்தியாயமாகும்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கன்னிவெடித் தாக்குதல் ஒன்றில் சிறிலங்கா இராணுவத் தளபதி கொப்பேக்கடுவ கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடியாகவே, சிறிலங்கா ராணுவத்தினரால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அச்சம்பவத்துடன் எவ்விதத் தொடர்புமற்ற மயிலந்தனை கிராமத்தின் மீது அங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகத் தங்களின் கோபத்தைத் திருப்பிய சிறிலங்காவின் சிங்களப் பாதுகாப்புத் தரப்பினர், அக்கிராமத்தையே கொடூரமாகச் சூறையாடினர்.

அன்று அமைதியாக வாழ்ந்துகொண்டிருந்த அப்பாவி கிராம மக்கள் மீது துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் கோடாரிகளைக் கொண்டு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது. கைக்குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் எனப் பாரபட்சமின்றி 39 பொதுமக்கள் அன்றைய நாளில் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.

அன்றைய நாளில் சிறிலங்காப் படைகள் ஆடிய மனிதவேட்டையானது தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட இனப்படுகொலையாகவே பார்க்கப்படுகிறது.

உயிருக்குப் பயந்த மக்கள் தங்களின் வீடுகள், நிலங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை அப்படியே போட்டுவிட்டு, சொந்த ஊரை விட்டு வெளியேற நேரிட்டது.

ஒரே நாளில் ஒரு முழு கிராமமும் சுடுகாடாக மாற்றப்பட்டு அம்மக்களின் நிம்மதியான வாழ்வு முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டது.

இதேபோன்று கொன்றொழிக்கப்பட்டு, நீதியும் நியாயமும் மறுக்கப்பட்ட அப்பாவித் தமிழ் உறவுகளை ஐபிசி தமிழ் கனதியான வலிகளோடு நெஞ்சில் நிறுத்தி நினைவேந்துகிறது.

வலிகளோடு வாழும் இந்த இனத்தின் மீதான ஒவ்வொரு படுகொலைக்குமான நீதிக்கான பயணத்தில் இதயசுத்தியோடு பயணிப்போம்.

கனவுத்திட்டங்களை கல்லால் அடிப்பது BK போன்ற எதிர்கால கனவாளர்களையும் அடிக்கும்!

கனவுத்திட்டங்களை கல்லால் அடிப்பது BK போன்ற எதிர்கால கனவாளர்களையும் அடிக்கும்!

பலாலி விமான நிலைய இழப்பீடு விவகாரத்தில் அமளி! சத்திய கடதாசியில் குளறுபடி

பலாலி விமான நிலைய இழப்பீடு விவகாரத்தில் அமளி! சத்திய கடதாசியில் குளறுபடி

கிழக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை சுருட்டிய அரசியல்வாதிகள்

கிழக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை சுருட்டிய அரசியல்வாதிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026