கனவுத்திட்டங்களை கல்லால் அடிப்பது BK போன்ற எதிர்கால கனவாளர்களையும் அடிக்கும்!

Sonnalum Kuttram Reecha Baskaran Kandiah
By Independent Writer Aug 09, 2026 03:24 PM GMT
Report

ஹெய்னாஸ் எனப்படும் கழுதைப்புலிகளின் மோசமான சந்தர்ப்பவாத வேட்டையாடித்தனத்தில் அல்லது திரைத்துறையில் ரஜினி நடித்த சிவாஜி என்ற படத்தில் நீ அமெரிக்காவுக்குப் போய்விடு சிவாஜி என்ற கருத்தில் எல்லாம் பலருக்கு பெரிதும் நம்பிக்கை இருப்பதில்லை.

எனினும் அவ்வாறான நம்பிக்கையில்லாதவர்களைக் கூட சலிப்படையவும் விரக்தியையும் கொள்ள வைக்கும் வகையில் சமூக வலைத்தள வேட்டையாடிகளின் ஹெய்னாஸ் ரக வடக்கின் ஒரு நிகழ்வை மையப்படுத்திய பதிவுகளாக வருகின்றன.

அதிலும் விமர்சனங்கள் என்ற பெயரில் கிட்டியதே வாய்ப்பு என திட்டமிட்ட அவதூறுகள் வருகின்றன

போரால் பாதிக்கப்பட்ட வடபுலத்தில் தனது மக்களுக்காக ஒரு மனிதன் களத்தில் இறங்கி சில திட்டங்களை வகுத்து தனது நேரத்தையும் உழைப்பையும் செலவிடும் போது சமூக ஊடகத்தின் சில பக்கங்கள் அந்த மனிதரை ஹெய்னாஸ்கள் போலத் தாக்கி பிரபலமடைகின்றன

ஒருவருக்கு அவரது திறமைக்கும் உழைப்புக்கும் அவரது சொந்த மண்ணில் மதிப்பு கிடைப்பதற்கு ஒரு சமூகமும் அமைப்பும் வேண்டும்.

ஒருகாலத்தில் அங்கு அந்த சமுகஅமைப்பு சரியாக இருந்தாலும் இப்போது அதற்குள் வேட்டையாடிகள் புகுந்து சிந்தனையோட்ட வறுமையை வெளிப்படுத்தி ....யாரிவர்? இவரால் என்ன செய்ய முடியும்….என ஒரு மனிதரை குறிவைக்கும் வெளிப்படுத்தல்களை செய்கின்றார்கள்.

இவ்வாறான சமுகத்தள வேட்டையாடிகள் சொற்ப நாட்களில் துண்டைக்காணோம் துணியை காணோம் என அகன்றுவிடக்கூடும். ஆனால் மாற்றங்களை உருவாக்கத்தலைப்படுவர்களில் பலர் கரவொலிகளை எதிர்பார்க்காமல் எதிர்ப்புகளைக் கடந்து முன்னேறும் முகங்களாக தொடரககூடும்.

இந்த முகங்களில் றீச்சா BK யும் ஒருவராக இருக்கவேண்டும். ஒரு தலைமுறையின் வாழ்க்கையையே மாற்றிவிடும் சில திட்டங்கள் காயப்படக்கூடாதென்பதால் இயக்கச்சியில் இருப்பதற்கு பதிலாக நெதர்லாந்துக்கு சென்று உங்கள் திறமையைப் பயன்படுத்திக்கொளளுங்கள்; என சிவாஜி பட விவேக் பாணியில் விரக்தி ஆலோசனைக்கு இங்கு பரிந்துரைகள் கூடாது.

பல வருடங்களுக்கு முன்னர் இலங்கையை மாற்ற முடியவில்லை என்பதால் அந்த நாட்டை விட்டு வெளியேறிய ஏதிலிகளின் அடுத்தகட்டம் இப்போது அதே நாட்டுக்கு திரும்பி அங்கு ஒரு மாற்றத்துக்கு முயற்சி செய்யும் போது அவ்வாறான முயற்சிகளை நோக்கமும் தரமும் அறமும் அற்ற கீழ்நிலையில் விமர்சனங்களால் அடிப்பது அபத்தம்

உணவுத்திருவிழாவில் நடந்த சம்பவங்கள் போல இனிமேல் இடம்பெறக்கூடாதென கரிசனை கொள்வது இயல்பானது. திடீர் நெருக்கடிகள் தான் புதிய பாடங்களை தருவது.

ஆனால் இந்த நெருக்கடிகளுக்குரிய பொறுப்புக்கூறல் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவற்றை கேலி செய்வது அவதூறு செய்வது தனிப்பட்ட தாக்குதலை நடத்தும் கலவைகள் தான் இங்கு நாசகாரம்.

ஒரு திட்டத்தை விமர்சிப்பதற்கு உரிமை உள்ளதுபோலவே ஒரு திட்டத்தை உருவாக்கியவருக்கும் அதுகுறித்த சில கனவுகளை கண்டு அதனை நடைமுறைப்படுத்துவது குறித்த காணும் உரிமையும் இருக்கிறது.

ஆனால் கனவுத்திட்டங்களை கொண்டிருப்பவர்களை ஒவ்வொரு முறையும் கல்லால் அடித்துக்கொண்டிருந்தால் நாளை றீச்சா போல கனவு காண முன்வருபவர்கள் குறைந்து விடுவார்கள்.

இது நல்ல முயற்சிகளையும் நிராகரித்து ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு ஆபத்தான குழியையும் பறித்துவிடும்.

BK இன் உணவுத்திருவிழாவை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதற்காக அவர் எடுத்த முயற்சியை நேர்மையாக மதிப்பிடாமல் கொச்சைப்படுத்த முடியாது. அதற்கான பொறுப்பு சமூகவலைத்தள வேட்டையாடிகளுக்கும் உள்ளது   


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026