அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகளை தெரிவிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு
அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் முதற்கட்டப் பயனாளிகள் பட்டியலில் தகுதி பெறாதவர்கள், மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
பிரதேச செயலகத்தில் செய்யப்பட்ட கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, இன்று (11) முடிவடைய இருந்த இந்தக் காலக்கெடுவை, இந்த மாதம் 15ஆம் திகதி வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக நலன்புரிகள் சபை அறிவித்துள்ளது.
இணைய வழி மூலம்
அதன்படி, பிரதேச செயலகங்களின் அதிகாரிகள், விண்ணப்பதாரர்கள் மற்றும் பொது மக்கள் இணையவழி முறை மூலம் மேன்முறையீடுகள் அல்லது ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

1924 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைப்பதன் மூலம் கூடுதல் தகவல்களையும் உதவியையும் பெறலாம் என்றும் சபை குறிப்பிட்டுள்ளது.
இன்று (11) நிலவரப்படி, மொத்தம் 143,805 மேன்முறையீடுகள் இந்த அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் 6,478 பொது ஆட்சேபனைகள் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |