சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு: விளக்கமறியலும் நீடிப்பு
Gotabaya Rajapaksa
Sri Lanka Magistrate Court
Arrest
By Sindu
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஷ்வர பண்டாரவுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை பதில் நீதவான் கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி பணிப்பாளர் சபையின் நிதியின் கீழ் இரு வேறு பதவிகளுக்கான சம்பளத்தைப் சட்டவிரோதமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
பிணை கோரிக்கை நிராகரிப்பு
இன்று (11) குறித்த வழக்கு விசாரணையின்போது, இவருக்கான பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அத்துடன் பிணை தொடர்பான பரிசீலனை எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்