வரவு செலவுத் திட்டம் 2027: ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கான நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல்
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 2027 ஆம் நிதியாண்டிற்கான (2027 ஜனவரி 1 முதல் 2027 டிசம்பர் 31 வரை) அரசாங்கச் செலவினங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நாளை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
2026 செப்டம்பர் 21 ஆம் திகதி வர்த்தமானியில் இச்சட்டமூலம்,வெளியிடப்பட்டது.
பிரதமர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரினால் 2026 ஒக்டோபர் 07 ஆம் திகதி அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
மொத்தச் செலவினம் - கடன் உச்சவரம்பு
* மொத்த அரசாங்கச் செலவினம்: 2027 ஆம் நிதியாண்டிற்கான பொதுச் சேவைகளுக்கு மதிப்பிடப்பட்டுள்ள மொத்தச் செலவினத் தொகை 4,992 பில்லியன் 773 மில்லியன் 388 ஆயிரம் ரூபாவாகும் (ரூ. 4,992,773,388,000).
* இதில் மீண்டுவரும் செலவினம் ரூ. 3,240.24 பில்லியன் (3,240,242,388,000) ஆகவும், மூலதனச் செலவினம் ரூ. 1,752.53 பில்லியன் (1,752,531,000,000) ஆகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
* கடன் பெறும் எல்லை: 2027 ஆம் நிதியாண்டின் போது உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ திரட்டப்படும் கடன்களின் நிலுவையாகவுள்ள மீதி 3,800 பில்லியன் ரூபாவை விஞ்சுதல் ஆகாது எனச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள்
2027 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின்படி (முதலாம் அட்டவணை), பிரதான அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மீண்டுவரும் மற்றும் மூலதனச் செலவின விபரங்கள் வருமாறு:
* பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு:
1. மீண்டுவரும் செலவினம்: ரூ. 608,000 மில்லியன் (ரூ. 608 பில்லியன்)
2. மூலதனச் செலவினம்: ரூ. 43,000 மில்லியன் (ரூ. 43 பில்லியன்)
* நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு:
1. மீண்டுவரும் செலவினம்: ரூ. 332,972 மில்லியன்
2. மூலதனச் செலவினம்: ரூ. 523,881 மில்லியன்
* மாகாண சபைகள் (தலைப்பு இல. 312 - 319 மற்றும் 321):
1. மீண்டுவரும் செலவினம்: ரூ. 574,950 மில்லியன்
2. மூலதனச் செலவினம்: ரூ. 85,000 மில்லியன்
* சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு:
1. மீண்டுவரும் செலவினம்: ரூ. 470,499.99 மில்லியன் (ரூ. 470,499,998,000)
2. மூலதனச் செலவினம்: ரூ. 120,000 மில்லியன்
* போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு:
1. மீண்டுவரும் செலவினம்: ரூ. 68,000 மில்லியன்
2. மூலதனச் செலவினம்: ரூ. 432,000 மில்லியன்
* பாதுகாப்பு அமைச்சு:
1. மீண்டுவரும் செலவினம்: ரூ. 388,000 மில்லியன்
2. மூலதனச் செலவினம்: ரூ. 70,000 மில்லியன்
* கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு:
1. மீண்டுவரும் செலவினம்: ரூ. 250,000 மில்லியன்
2. மூலதனச் செலவினம்: ரூ. 78,000 மில்லியன்
* பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு:
1. மீண்டுவரும் செலவினம்: ரூ. 210,000 மில்லியன்
2. மூலதனச் செலவினம்: ரூ. 20,500 மில்லியன்
* கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு:
1. மீண்டுவரும் செலவினம்: ரூ. 99,000 மில்லியன்
2. மூலதனச் செலவினம்: ரூ. 119,000 மில்லியன்
* வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சு:
1. மீண்டுவரும் செலவினம்: ரூ. 2,800 மில்லியன்
2. மூலதனச் செலவினம்: ரூ. 79,500 மில்லியன்
* கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு:
1. மீண்டுவரும் செலவினம்: ரூ. 43,800 மில்லியன்
2. மூலதனச் செலவினம்: ரூ. 36,000 மில்லியன்
* நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு:
1. மீண்டுவரும் செலவினம்: ரூ. 48,000 மில்லியன்
2. மூலதனச் செலவினம்: ரூ. 18,000 மில்லியன்
ஏனைய முக்கியத் துறைகளுக்கான ஒதுக்கீடுகள்
• வலுசக்தி அமைச்சு: மீண்டுவரும் செலவினம் ரூ. 1,200 மில்லியன் / மூலதனச் செலவினம் ரூ. 29,000 மில்லியன்.
• பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு: மீண்டுவரும் செலவினம் ரூ. 13,000 மில்லியன் / மூலதனச் செலவினம் ரூ. 13,000 மில்லியன்.
• டிஜிட்டல் பொருளாதார அமைச்சு: மீண்டுவரும் செலவினம் ரூ. 6,000 மில்லியன் / மூலதனச் செலவினம் ரூ. 20,000 மில்லியன்.
• வௌிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு: மீண்டுவரும் செலவினம் ரூ. 22,000 மில்லியன் / மூலதனச் செலவினம் ரூ. 2,700 மில்லியன்.
• சுற்றாடல் அமைச்சு: மீண்டுவரும் செலவினம் ரூ. 15,200 மில்லியன் / மூலதனச் செலவினம் ரூ. 6,000 மில்லியன்.
• மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு: மீண்டுவரும் செலவினம் ரூ. 16,750 மில்லியன் / மூலதனச் செலவினம் ரூ. 3,250 மில்லியன்.
* புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு: மீண்டுவரும் செலவினம் ரூ. 11,000 மில்லியன் / மூலதனச் செலவினம் ரூ. 1,000 மில்லியன் (அட்டவணையில் 7,000 மில்லியன் மூலதனச் செலவினமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது).
* இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு: மீண்டுவரும் செலவினம் ரூ. 8,500 மில்லியன் / மூலதனச் செலவினம் ரூ. 8,500 மில்லியன்.
* கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு: மீண்டுவரும் செலவினம் ரூ. 6,300 மில்லியன் / மூலதனச் செலவினம் ரூ. 8,800 மில்லியன்.
* கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு: மீண்டுவரும் செலவினம் ரூ. 4,300 மில்லியன் / மூலதனச் செலவினம் ரூ. 7,400 மில்லியன்.
விசேட செலவினக் கூறுகள்
* அதிமேதகு ஜனாதிபதி (தலைப்பு 1):
செயல்முறைச் செயற்பாடுகளுக்கு ரூ. 2,730.63 மில்லியன் (மீண்டுவரும்) மற்றும் ரூ. 366 மில்லியன் (மூலதன); அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ரூ. 8,107.19 மில்லியன் (மூலதன).
* பிரதம அமைச்சர் அலுவலகம் (தலைப்பு 2):
மீண்டுவரும் செலவினம் ரூ. 952.1 மில்லியன் / மூலதனச் செலவினம் ரூ. 70 மில்லியன்.
* நாடாளுமன்றம் (தலைப்பு 16):
மீண்டுவரும் செலவினம் ரூ. 4,159.7 மில்லியன் / மூலதனச் செலவினம் ரூ. 1,947.55 மில்லியன். • தேர்தல்கள் ஆணைக்குழு (தலைப்பு 20): மீண்டுவரும் செலவினம் ரூ. 10,285.4 மில்லியன் | மூலதனச் செலவினம் ரூ. 295 மில்லியன்.
* இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு (தலைப்பு 10):
மீண்டுவரும் செலவினம் ரூ. 2,358.4 மில்லியன் / மூலதனச் செலவினம் ரூ. 127 மில்லியன்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |