ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
Sri Lanka Police
Johnston Fernando
High Court of Sri Lanka
By Thulsi
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
சொகுசு வாகனம் இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பான வழக்கை எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதிக்கு அழைக்குமாறு நீதவான் இன்று (11.11.2026) உத்தரவிட்டுள்ளார்.
வரி செலுத்தாமல் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சொகுசு BMW ரக சிற்றூர்ந்து தொடர்பில், மூன்று குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்தே மேற்படி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (11) வழங்கப்படவிருந்த நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதவான் இன்று (11) உத்தரவிட்டுள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி