ஜனநாயகத்தை ஸ்தாபிக்க வேண்டுமாயின் 19 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் - மைத்திரிபால சிறிசேன
Maithripala Sirisena
implement
srilankan crisis
19th-amendment
20 th amendment
interim Government
By Kanna
ஜனநாயகத்தை ஸ்தாபிக்க வேண்டுமாயின் 19 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் நெருக்கடியை தீர்க்கவேண்டுமானால் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு முன்னர் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.
20 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்து 19 ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டு வந்தால் சர்வதேசம் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய நிறைவேற்று சபை ஒன்றை ஸ்தாபித்து அதனூடாக அமைச்சர்களை நியமிப்பது அவசியம் என்றும் இடைக்கால அரசாங்கத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் அங்கம் வகிக்க வேண்டும் என்றும் மைத்ரிபால சிறிசேன ஜோசனை முன்வைத்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி