கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி மீட்பு!
மட்டக்களப்பில் யுவதி ஒருவர் கல்லடி பாலத்தின் மேல் இருந்து வாவியில் வீழ்ந்து உயிர்மாய்க்க முயற்சித்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (13-10-2026) இரவு இடம்பெற்றுள்ளது.
19 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிர்மாய்க்க முற்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த கல்லடி பழைய பாலத்தில் சம்பவ தினமான நேற்று இரவு 8.00 மணியளவில் யுவதி ஒருவர் அவரது பாதணி, கை பை மற்றும் குடை என்பவற்றை கைவிட்டு விட்டு பாலத்தில் இருந்து வாவியில் குதித்துள்ளார்.
இதன்போது வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் இதனை கண்டு உடனடியாக செயல்பட்டு வாவியில் இருந்து யுவதியை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இதையடுத்து காவல்துறையினர், 1990 அம்புலன்ஸ் வண்டி ஊடாக மட்டு போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதித்து யுவதி உயிரை காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதி பிறிதொரு பிரதேசத்தில் இருந்து வந்துள்ளதாகவும் உயிர்மாய்க்க முற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
