விபத்தில் சிக்கி பலியான ஏழு வயது சிறுவன்: தந்தை வைத்தியசாலையில் அனுமதி!
மொனராகலையில் விபத்தில் சிக்கி ஏழு வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்தோடு சிறுவனின் தந்தையும் விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பிபிலைப் பகுதியைச் சேர்ந்த தந்தை தன் மகனுடன் முச்சக்கரவண்டியில் பயணித்து கொண்டிருந்த போதே விபத்து சம்பவத்துள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஏழு வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற சிறுவனின் 38 வயதுடைய தந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதியைப் கால்துறையினர் கைதுசெய்துள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |