சிரேஸ்ட மாணவர்களால் தாக்கப்பட்ட முதலாம் வருட தமிழ் மாணவன்; பேராதனை பல்கலைக்கழகத்தில் சம்பவம்!
பேராதனை பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் முதலாம் வருடத்தில் கல்வி கற்று வருகின்றார்.
காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்கப்பட்ட காரணம்

குறித்த மாணவன் விடுதியில் தங்கியிருந்தபோது மூன்று சிரேஸ்ட மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று சிரேஸ்ட மாணவர்கள் தன்னை மிரட்டியதாகவும், ஒருவர் தன்னை அடித்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளார்.
மேலும், முதலாம் வருட மாணவரைத் தாக்கிய நான்காம் வருட சிரேஸ்ட மாணவர்கள் மது போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை

குறித்த சம்பவம் தொடர்பாக பேராதனை காவல்துறையினருக்கும், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளதோடு, இரு தரப்பும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தாக்கப்பட்ட குறித்த மாணவன் யாழ்ப்பாணத்தைச் சேர்த்தவர் என்பதோடு, தற்போது நோர்டன் பிரிட்ஜ் பகுதியில் வசித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.