2.5 மில்லியன் மாயம் : முக்கிய கலந்துரையாடலுக்காக கூடவுள்ள கோப் குழு
திறைசேரியிலிருந்து செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இணைய குற்றவாளிகளிடம் சென்ற சம்பவம் தொடர்பாக அரசாங்க நிதிகள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்படவுள்ளது.
அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதிப் பற்றிய குழு இன்று (08) பிற்பகல் கூடவுள்ளது.
இதன்போது, இந்தச் சம்பவம் தொடர்பாக திறைசேரி தயாரித்துள்ள அறிக்கை குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னிலையாகுமாறு அறிவிப்பு
இந்நிலையில் நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியபெரும மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோருக்கும் அரசாங்க நிதிகள் பற்றிய குழுவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அரசாங்கத்தின் திறைசேரி நிதி மாயமான சர்ச்சை குறித்து தயாரிக்கப்பட்ட விசேட விசாரணை அறிக்கை அண்மையில் அரசாங்க பொது நிதி பற்றிய குழுவிடம் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 11 மணி நேரம் முன்