வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்!
ஒரு வருடத்திற்கும் மேலாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணி தொடங்கப்படவுள்ளது.
அதன்படி, குறித்த பணிகள் இன்று (08) காலை 10.00 மணிக்கு மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில், வேரஹேராவில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள வளாகத்தில் இப்பணி தொடங்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சு
டெண்டர் செயல்முறை தொடர்பான சிக்கல்கள் காரணமாக, மே 2025 முதல் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.
வாகன இலக்கத் தகடுகள் அச்சிடுவது தொடர்பான ஒப்பந்தத்தை அரசாங்கம் இந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்கொண்டது.

22 ஆண்டுகளாக வாகன இலக்கத்தகடுகளை அச்சிட்டு வந்த நிறுவனத்தின் ஒப்பந்தக் காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கான ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்காகப் போக்குவரத்து அமைச்சு கொள்முதல் செயல்முறையைத் தொடங்கியது.
அதன்படி, மே 01ஆம் திகதி முதல் வாகன இலக்கத்தகடுகளை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டு, புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் உட்பட நான்கரை இலட்சத்திற்கும் மேற்பட்ட வாகன இலக்கத்தகடுகள் அச்சிடுவதற்காகக் குவிந்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 11 மணி நேரம் முன்