முல்லைத்தீவில் 5 ஆண்டுகளில் 21 ஆயிரம் ஆட்கள் இல்லை - அம்பலப்படுத்திய தமிழ் எம்.பி
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டு புள்ளிவிபரத்தகவலின் படி 21 ஆயிரம் வரையான மக்கள் உயிரிழந்தும் மாவட்டத்தினை விட்டு வெளியேறியுமாக மாறியுள்ளார்கள் என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முள்ளியவளை மாமூலைப்பகுதியில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வு ஒன்றில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை நாட்டில் அதிக சனத்தொகை உள்ள மாவட்ட ஹம்பகா மாவட்டம் குறைந்த சனத்தொகை உள்ள மாவட்டம்.
குறிப்பிட்ட அளவு இறப்பு
முல்லைத்தீவு மாவட்டம் கடந்த 5 ஆண்டுகால புள்ளிவிபரத்தினை பார்த்தால் 2021 ஆம் ஆண்டு இருந்த மக்கள் தொகைக்கும் 2026 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருக்கின்ற மக்களின் தொகைக்கும் இடையில் வித்தியாசம் 21ஆயிரம் பேர் வரையில் மாவட்டத்தில் இல்லை எவ்வாறு இல்லை என்று பார்த்தால் குறிப்பிட்ட அளவு இறப்பு பதிவாகி இருக்கின்றது.

அதிகளவானவர்கள் வெளிநாட்டிற்குத்தான் சென்றுள்ளார்கள் ஆனால் வெளிநாட்டிற்கு சென்றவர்களை நான் பிழைசொல்லவரவில்லை
கடலில் அபகரிப்பு,காணிகள் அபகரிப்பு என்ற நிலையில் இங்கு அவர்களின் வாழ்வாதாரம் கொண்டுசெல்ல முடியாத நிலை ஆனால் இருக்கின்ற மக்கள் அதனை தக்கவைத்துக்கொண்டுதன் இருக்கின்றார்கள்.
இவ்வாறு இருந்தால் ஒருகாலகட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டம் இல்லாமல் போகுமோ என்ற நிலை வரலம் என்பதோ தெரியவில்லை.
தமிழர்களின் வீதம் குறைவு
பிறப்பு வீதத்திலும் தமிழர்களின் வீதம் குறைவு 1983,84 ஆம் ஆண்டுகாலத்தில் குடும்பநலத்திட்டம் என்று அரசாங்கம் கொண்டுவந்தார்கள் அதனை சிங்கள மக்கள் பாவிக்கின்றார்களோ தெரியவில்லை.

ஆனால் தமிழ்மக்கள் தான் அதனை சீராக பாவித்துக்கொண்டிருக்கின்றார்கள் ஒருபிள்ளை அல்லது இரண்டு பிள்ளையுடன் இருக்கின்றார்கள். முந்திய ஆட்கள் பத்துப்பிள்ளை எட்டுப்பிள்ளை என்று பெற்றார்கள்.
வடமாகாணத்தில் அதிகளவான நிலப்பரப்பு கொண்ட மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம் புலம்பெயர் அமைப்புக்கள் மக்கள் இந்த மாவட்டத்தில் குடும்பங்களை குடியேற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கள் அதற்கான ஒழுங்குகளை நாம் பார்ப்போம்.
இவ்வாறான வழிகளிலும் புலம்பெயர்ந்தவர்களின் கவனங்கள் இருக்கவேண்டும் அதற்கான வழிகளை ஏற்படுத்துங்கள் அதற்கு நாங்கள் உதவியாக இருப்போம்.
இவ்வாறுதான் முல்லைத்தீவின் நிலை போகின்றது என்பதை சுட்டிக்காட்டவேண்டியபொறுப்பு என்னிடம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 11 மணி நேரம் முன்