பிரபல நடிகருக்கு விதிக்கப்பட்டது ஒரு வருட சிறை
காசோலை மோசடி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என கண்டறிந்த நீதிமன்றம் பிரபல நடிகர் விமலுக்கு ஒருவருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நடிகர் விமல் நடித்த திரைப்படம் ‘மன்னர் வகையறா’. இந்தப் படத்தை தயாரிக்க நடிகர் விமல், நிதியாளர் கோபி என்பவரிடமிருந்து ரூ.4.5 கோடி கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை அவர் வழங்கவில்லை என தெரியவந்துள்ளது.
காசோலை மோசடி
பின்னர், அந்த தொகையை விமல் காசோலையாக வழங்கியுள்ளார்.
இந்த காசோலையை கோபி வங்கியில் செலுத்திய போது, கணக்கில் பணம் இல்லை என்று திருப்பி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து ரூ.4.5 கோடி காசோலை மோசடி வழக்கை நடிகர் விமல் மீது நிதியாளர் கோபி சென்னையில் உள்ள 11-வது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார் .
இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கெனவே நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தார். இதன்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நீதிமன்றினால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
ஒரு வருட சிறைத் தண்டனை
அதில், விமலுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளதாகவும் எனவே, அவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனையை விதிப்பதாகவும், வாங்கிய தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த தீர்ப்பு வழங்கும்போது நடிகர் விமல் தரப்பில், மேல்முறையீட்டு செய்ய உள்ளதாகவும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 16 மணி நேரம் முன்