பாதாள உலக குழு உறுப்பினர் ரத்கம விதுராவின் சொத்துக்கள் முடக்கம்!
பாதாள உலக குழு உறுப்பினர் ரத்கம விதுரவுக்குச் சொந்தமான 150 மில்லியன் மதிப்புள்ள சொத்து முடக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தெரிவித்துள்ளது.
புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட தீவிர விசாரணையில் இந்த சட்டவிரோதமான சொத்து முடக்கப்பட்டுள்ளது.
குறித்த சொத்துக்கள் ரத்கம விதுராவின் தாயார் பெயரில் வாங்கப்பட்டிருந்ததாக காவல்துறை தெரிவித்தது.
1.5 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்து
அவற்றில், ரத்கம, தேவநிகொடவில் 13.72 பேர்ச்சில் கட்டப்பட்ட, சுமார் ரூ. 6 கோடி மதிப்புள்ள மூன்று மாடிக் கட்டிடமும் அடங்கும் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில், சுமார் ரூ. 45 கோடி மதிப்புள்ள 9.10 பேர்ச்சஸ் நிலமும், அதே பகுதியில் பாதி கட்டி முடிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடமும், சுமார் ரூ. 25 கோடி மதிப்புள்ள 12.33 பேர்ச்சஸ் நிலமும், மற்றும் சுமார் ரூ. 20 கோடி மதிப்புள்ள மற்றொரு நிலமும் அடங்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 9 மணி நேரம் முன்