கண்டி மாவட்டத்தின் இரு பகுதிகளில் 48 மணி நேர நீர் வெட்டு!
கண்டி மாவட்டத்தின் திகன மற்றும் மெனிக்ஹின்ன ஆகிய பகுதிகளில் 48 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இன்று (23) வியாழக்கிழமை காலை 8:30 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த நீர் வெட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 8:30 மணி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அவசரப் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் சபை குறிப்பிட்டுள்ளது.
மக்களிடம் கோரிக்கை
நீர் வெட்டு காரணமாக குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வருத்தம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நீர் விநியோகம் சீரமைக்கப்படும் வரை பாதிக்கப்படும் பகுதி மக்கள் தேவையான தண்ணீரைச் சேமித்து வைத்துப் பொறுப்புடன் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 9 மணி நேரம் முன்