மாணவர் போராட்டத்தால் பற்றி எரியும் டெல்லி- கடுமையான தண்டனை: பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தியாவில் நாடு தழுவிய அளவில் மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்ய சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.
இந்தியாவின் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவ அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசின் முதன்மை இலக்கு
இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதே அரசின் முதன்மை இலக்கு என வலியுறுத்தியுள்ளார்.
Nothing is more important than the welfare and future of our youth!
— Narendra Modi (@narendramodi) July 23, 2026
We have decided to set up fast-track courts to ensure swift and stringent punishment for those involved in paper leaks. Have directed the concerned authorities and officials to take all necessary steps in this…
நமது இளைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை விட முக்கியமானது எதுவுமில்லை! வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்ய விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம்."
"இது தொடர்பாகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
நமது இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாட முயல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
ரணிலின் ஆட்சியில் மாயமான 715 மில்லியன் டொலர்கள்! கடத்தல் பின்னணியில் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 13 மணி நேரம் முன்