இறுதி யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட வீட்டுத் திட்டம்!
இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்து முகாம்களில் வசிக்கும் மக்களுக்காக 2,500 வீடுகளை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
டித்வா சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதியை வழங்கும் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்றபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இறுதிப் போர்
2009 ஆம் ஆண்டு இறுதிப் போர் நிறைவடைந்த போதிலும் தற்போதும் இடம்பெயர்ந்த முகாம்களில் இன்னும் மக்கள் வசிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “ இவ்வாறு போரினால் இடம்பெயர்ந்துள்ள மக்களைத் தேர்ந்தெடுத்து 2,500 வீடுகளை அமைக்க வீடொன்றுக்கு 20 இலட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளோம்.
இதுபோன்ற சுமார் 31,000 வீடுகளை அமைக்க நாங்கள் திட்டமிட்டிருந்த நேரத்திலேயே இந்தப் பேரழிவு காரணமாக சுமார் 20,000- 25,000 வீடுகளை அமைக்க வேண்டியுள்ளது.
இதேவேளை, மலையக மக்களுக்கு வீடுகளை அமைக்க இந்திய நிதியுதவியில் இலங்கை அரசாங்கமும் இணைந்து முன்மொழிந்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 9 மணி நேரம் முன்