பாடசாலை உட்கட்டமைப்பை மேம்படுத்த 2,500 மில்லியன் ஒதுக்கீடு!
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Sri Lankan Schools
By Harrish
பாடசாலை உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 2,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தக்கட்ட அபிவிருத்தி
இந்த வரவு - செலவு திட்டத்தில் நாட்டின் அடுத்தக்கட்ட அபிவிருத்தி இலக்கியை நிறைவேற்றும் வகையிலான முன்மொழிவுகள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன்,அனைத்து தரப்பினரையும் பொருளாதார நடவடிக்கையில் இணைத்துக் கொள்ளும் திட்டங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாடசாலை உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 2,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், பல்கலைகழகங்கங்களின் தரத்தை மேம்படுத்த 137.000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்