யாழ். தெல்லிப்பழையில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 2.71 ஏக்கர் காணி விடுவிப்பு
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள தனியாருக்குச் சொந்தமான 2.71 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மல்லாகம் கோணப்புலம் கிராமத்தில் (J/214) உள்ள தனியாருக்குச் சொந்தமான குறித்த காணியை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது.
பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல் WMAM நிசங்கவினால் (Col. WMAM Nissanka) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் குறித்த ஆவணம் இன்று (23.11.2026) யாழ் மாவட்டச் செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
கையளிக்கப்பட்ட ஆவணம்
இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி மற்றும் மேஜர் HMDN ஹேரத் (Major HMDN Herath) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் - வலி வடக்கு பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் பிடித்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம்: சரத் பொன்சேகா வாக்குமூலம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |