பெறுமதியான வலம்புரி சங்குடன் பௌத்த தேரர் உட்பட இருவர் கைது
மட்டக்களப்பிற்கு மாத்தறையில் இருந்து விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்கு ஒன்றுடன் பௌத்த தேரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினர் நேற்று (7) இரவு கைதுசெய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக கல்குடா காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாண்டியடி விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவலையடுத்து அவர்கள் கல்குடா தபாற்கந்தோருக்கு அருகாமையில் நேற்றிரவு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
வலம்புரி சங்கு மீட்பு
இந்த நிலையில் பௌத்த தேரர் உட்பட இருவர் வலம்புரி சங்கு ஒன்றை விற்பனைக்காக கடத்தி வந்ததை அவதானித்த விசேட அதிரடிப்படையினர் அவர்களை சுற்றிவழைத்து மடக்கிப்பிடித்து கைது செய்ததுடன் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்கு ஒன்றையும் மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சான்றுப்பொருளான வலம்புரி சங்கையும் விசேட அதிரடிப்படையினர் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
CP0ARJ2
காவல்துறையினர் விசாரணை
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11