ஹோர்முஸ் நீரிணையில் ஈரானால் வழிமறிக்கப்பட்ட இந்திய எண்ணெய் கப்பல்!
ஹோர்முஸ் நீரிணையில் ஓமான் வழித்தடம் என்று அழைக்கப்படும் தெற்குப் பாத வழியாகப் பயணிக்க முயன்ற இந்திய எண்ணெய் கப்பல் ஒன்று வழிமறிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, ஹானா (HAANA) என்ற இந்திய எண்ணெய் கப்பலை, ஈரானின் பாரிய போர்க்கப்பல் ஒன்று வழிமறித்து எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் போர்க்கப்பல் விடுத்த கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து, அந்த இந்திய எண்ணெய் கப்பல் தனது பயணத்தைத் தொடர முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டுத் திருப்பியனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கப்பல்களின் நகர்வு
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், கடந்த 24 மணி நேரத்தில் ஹோர்முஸ் நீரிணையின் தெற்குப் பாதை வழியிலான கப்பல் போக்குவரத்து முற்றிலுமாகத் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Image Credit: gCaptain
அத்தோடு, அங்கு எந்தவொரு கப்பல்களின் நகர்வுகளும் பதிவாகவில்லை என்றும் ஈரானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |