மட்டக்களப்பில் கைதான போதைப்பொருள் வியாபாரிகள்
கொழும்பில் (Colombo) இருந்து மட்டக்களப்புக்கு (Batticaloa) கொண்டுவரப்பட்ட போதைப்பொருளை வியாபாரத்துக்காக எடுத்துச் சென்ற இரு வியாபாரிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு நகர் பகுதியில் வைத்து இன்று (20) அதிகாலையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, ஜஸ் போதை பொருள் மற்றும் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 640 ரூபா பணத்துடன் கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள்
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்று அதிகாலை 4.00 மணியளவில் ம்ட்டக்களப்பு நகர்பகுதி, திருகோணமலை வீதியில் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது கொழும்பில் இருந்து பேருந்து ஒன்றில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் குறித்த போதைப்பொருளை கடத்தி கொண்டு வந்து குறித்த வியாபரிகளிடம் வழங்கிய நிலையில் அதனை வாங்கி கொண்டு வரும்போது காவல்துறையினர் அவர்களை சுற்றிவளைத்தனர்.
இந்தநிலையில், ஒருவரிடமிருந்து 3,200 மில்லிக்கிராம், ஒருவரிடம் இருந்து 4,500 மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளும், ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 640 ரூபா பணம், 2 கையடக்க தொலைபேசிகளை கைப்பற்றினர்.
மேலதிக விசாரணை
இதில் கைது செய்யப்பட்டவர்கள் பூம்புகார் லயன்ஸ் கிளப் வீதி மற்றும் கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எனவும் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளதாகவும் காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் இவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
