கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
இன்று முதல் அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரவலாக மழை
ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மேலும், வடமத்திய, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |