பத்தேகம துப்பாக்கிச்சூட்டில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு! வெளியான மேலதிக தகவல்
புதிய இணைப்பு
பத்தேகம, ஹல்பேதொட பகுதியில் இன்று (27) காலை கார் ஒன்றில் வந்த குழுவினரால் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலதிக தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டியைச் செலுத்திய ஆண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், இரு பெண்களில் ஒருவர் பத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உயிரிழந்த பெண் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த மற்றைய பெண் மேலதிக சிகிச்சைகளுக்காகக் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குற்றவியல் விசாரணை பிரிவு
உயிரிழந்த பெண், பத்தேகமவில் அமைந்துள்ள காலி குற்றவியல் விசாரணை பிரிவில் கையொப்பமிடுவதற்காகச் சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த போதே இத்துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியுள்ளார்.

அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியை வழிமறித்து டி-56 (T-56) ரக துப்பாக்கியால் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
பத்தேகம - ஹல்பேதொட பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மீது இன்று (27) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கார் ஒன்றில் வந்த நபர்கள் இத்துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பெண்களும், ஒரு ஆணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்தனர்.
நல்லூரில் வைக்கப்பட்ட திலீபனின் திருவுருவச்சிலை அகற்றம்.... பின்னணியில் சி.வி.கே : எழுந்துள்ள குற்றச்சாட்டு
காவல்துறை விசாரணை
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த மற்றைய பெண் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு காவல்துறை குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |