காவல்துறையினர் உட்பட மூவருக்குக் கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு
முன்னாள் காவல்துறை அதிகாரிகள் இருவருக்கும் பொதுமகன் ஒருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
தகராறு ஒன்றைத் தொடர்ந்து பணத்தைக் கொள்ளையடித்தமை தொடர்பாகக் குறித்த மூவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையிலே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டமா அதிபரினால் தொடரப்பட்ட வழக்கு
2008 ஆம் ஆண்டு தெஹிவளைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தகராறு முற்றியதைத் தொடர்ந்து பணத்தைக் கொள்ளையடித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், சட்டமா அதிபரினால் இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டுகளுக்குக் குற்றவாளியாகக் காணப்பட்ட பொதுமகனுக்கு 5 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் காவல்துறை அதிகாரிகள் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |