படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் பலி
Batticaloa
Sri Lanka Police Investigation
By Vanan
மட்டக்களப்பு – நாவலடி பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
டிக் டொக் வீடியோ எடுப்பதற்காக இன்று (8) படகில் சென்ற 6 மாணவர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கரை திரும்பும் நடந்த விபரீதம்
நாவலடி குளத்திற்குச் சென்ற 6 மாணவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதிலேயே இந்த இரு மாணவர்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்த மாணவர்கள் பயணித்த படகு கரை திரும்பும் போது கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
படகு கவிழ்ந்ததில் அதில் இருந்த 6 மாணவர்களில் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மட்டக்களப்பு சீலாமன் பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 18 வயதுடைய இரு மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி