பூப்பறிக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
By Thulsi
பூப்பறிக்க சென்ற சிறுவன் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் கல்கிரியாகம - உஸ்ஸான பகுதியில் நேற்று சனிக்கிழமை (10) பதிவாகியுள்ளதாக கல்கிரியாகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் தேவஹுவ பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் என தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பகட்ட விசாரணை
குளத்தில் பூ பறிக்கச் சென்றபோது தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கல்கிரியாகம காவல்துறையினர், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி