யாழில் வன்முறைக்கும்பல் அட்டகாசம்: இரு முச்சக்கரவண்டிகள் தீக்கிரை
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Sathangani
யாழ்ப்பாணம் - அச்சுவேலி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று(07) இரவு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவரால் அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இதேவேளை கடந்த சில நாட்களாக இரண்டு வன்முறைக் கும்பல் இடையே இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டது என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்
குறித்த அனர்த்தம் தொடர்பாக அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக தீ விபத்து சம்பவங்கள் அதிகமாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 10 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்