களுத்துறையில் வீடொன்றிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்பு!
களுத்துறை தெற்கு காவல்துறை பிரிவிற்குற்பட்ட இசுரு உயன பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டில் தங்கியிருந்த இரண்டு பெண்கள் கடந்த சில நாட்களாகக் காணாமல் போயிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று (17) இரவு இந்த வீட்டை அண்மித்த பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக களுத்துறை தெற்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த வீட்டைச் சோதனையிட முற்பட்ட போது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது.
காவல்துறையினர் வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது வீட்டிற்குள் இரண்டு பெண்களின் சடலங்கள் காணப்பட்டுள்ளன.
65 மற்றும் 79 வயதுடைய இரண்டு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |