கிளிநொச்சியில் கிணற்றில் தவறி விழுந்து 2 வயதுக் குழந்தை பலி!
கிளிநொச்சியில் கிணற்றில் தவறி விழுந்து இரண்டு வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது.
தருமபுரம் காவல் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரமந்தனாறு ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த அறிவரசன் டினுசியா என்ற இரண்டு வயதுடைய குழந்தையே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் தாயும் உயிரிழந்த குழந்தையும் அயலவர் வீட்டிற்குச் சென்றபோது தாய் கணவனுக்கு உணவு கொடுப்பதற்காக அயலவர் வீட்டிலேயே சிறுமியை விட்டு வீடு சென்றுள்ளார்.
அயலவர் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியைத் காணாத நிலையில் அயலவர்கள் தாயாரிடம் சிறுமி வீடு வந்துள்ளாரா என வினவியுள்ளனர்.

அங்கும் குழந்தை இல்லாத நிலையில் தொடர்ந்து தேடியபொழுது பாதுகாப்பற்ற கிணற்றில் குறித்த குழந்தை வீழ்ந்து காணப்பட்டதை அவதானித்ததையடுத்து உடனடியாகச் சிறுமியை மீட்டுத் தருமபுரம் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இதன்போது சிறுமி ஏற்கனவே இறந்துள்ளார் என வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து உயிரிழந்த சிறுமியின் சடலம் மேலதிக விசாரணைக்காகக் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாகத் தருமபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |