சீனாவில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி
China
By Beulah
சீனாவில் தலைநகர் பீஜிங்கின் வடக்கு உள்ள மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால், கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கி இதுவரையில், 20 பேர் பலியாகியுள்ளதோடு, காணாமல் போன 27 பேரை தேடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
அத்துடன், 5 இலட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனமழை

கடந்த 50 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்ததால், குடியிருப்புக்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால், வீதிகள் மூழ்கியுள்ளதோடு, ஏராளமான கார்கள் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கடந்த மாதம், சீனாவின் தென்மேற்கு பகுதியான சோங்குயிங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி