உக்ரைனை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 20 பேர் பலி
By Dharu
உக்ரைனின் சபோரிஷியா பகுதியில், ரஷ்யா நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் மூன்று குழந்தைகளும் அடங்குவதாகவும், குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளதாகவும், அப்பகுதியின் பாதுகாப்பு மன்றத்தின் இணைத் தலைவர் இவான்பெடோரோவை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் பலர் காணாமல் போயுள்ளளதாகவும் கூறப்படுவதோடு அவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என அந்நாட்டு மீட்ப்புக்குழுக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
விளாடிமீர் ஜெலன்ஸ்கி
நேற்று இரவு முழுவதும் 13 பகுதிகள் தாக்கப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமீர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரஷ்யாவின் குண்டுவீச்சில் கடந்த நான்கு நாட்களில் 60க்கும் மேற்பட்டோர் உக்ரைனில் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்